அதி கூடிய தங்கம் வென்ற கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்கு இன்று பயணம்!

கிழக்குமாகாண மட்டத்தில் அதி கூடிய தங்கம் வென்ற கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று கல்லூரியில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி அண்மையில் திருகோணமலை கந்தளாய் லீலாரெட்ன மைதானத்தில் இடம்பெற்றபோது கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் 20 தங்கப்பதக்கங்களையும், 4 வெள்ளிப்பதக்கங்களையும் , 2 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைத்திருந்தனர்.
அத்துடன் 7 கிழக்கு மாகாண மட்ட சாதனைகள் முறியடித்ததுடன் ஆண்கள் பிரிவில் அஞ்சலோட்ட சம்பியன்களாகவும் , அதிக புள்ளிகளைப் பெற்ற கல்லூரியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Popular posts from this blog

இலங்கை உட்பட 4 நாடுகளில் வேற்று கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு

எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு

கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி படுகாயம்!