Posts

Featured post

சிரியாவில் பாடசாலை மீது விமானத் தாக்குதல்: 22 சிறுவர்கள் உள்பட 35 பேர் பலி!!!

Image
சிரியாவில் பாடசாலை வளாகம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 35 பேர் பலியாகினர்.  இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்றால், இது போர்க்குற்றம்தான் என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது.  சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு, மார்ச் மாதம் 15-ந் திகதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. அவ்வப்போது சிறிய அளவில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டபோதும், தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த உள்நாட்டுப்போர் நீடிக்கிறது.  3 லட்சத்துக்கும் அதிகமானோர் இதில் கொல்லப்பட்டு விட்டனர். பல லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.  ஆனாலும் சண்டை முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த நிலையில் அங்குள்ள இத்லிப் மாகாணத்தில் ஹாஸ் என்ற கிராமத்தில் உள்ள பாடசாலை வளாகம் மற்றும், சுற்றுப்புறங்கள் மீது நேற்று முன்தினம் போர் விமானங்கள் 6 முறை வான்தாக்குதல்களை நடத்தின. இதனால் பள்ளி கட்டிடங்கள் பெருத்த சேதத்துக்குள்ளாயின.  பெரிய அளவில் கரும்புகை மண்டலம் உருவானது. குழந்தைகளும், ஆசிரி...

கிழக்கில் பெருமளவில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்!

Image
திருகோணமலை கடற்கரையில் பெருமளவு மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. பூச்சக்கன்னி எனப்படும் பெருமதியான இனத்தைச் சேர்ந்த மீன்களே இவ்வாறு கரையொதுங்கியுள்ளன. சுமார் 20 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான மீன்கள் இதுவரை இறந்த நிலையில் கரையோதுங்கியுள்ளதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான காரணத்தை கடற் தொழில் திணைக்கள அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் நேற்று முன்தினமும் 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் கரைவலை மூலம் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் வரித் திருத்தம் அமுல்!

Image
இன்று முதல் திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியன நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த 26 ம் திகதி பாராளுமன்றத்தில் குறித்த வரித் திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய இன்று முதல் பெறுமதி சேர் வரி நூற்றுக்கு 11 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கவுள்ளது.

டாப்சிக்கு ஆசை வந்து விட்டதாம்!

Image
தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் டாப்சி. வந்தான் வென்றான், ஆரம்பம், வைராஜா வை போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது சிம்புவுடன் ‘கான்’ படத்தில் நடித்து வருகிறார். இரண்டு இந்திப் படங்களும் அவர் கைவசம் வைத்துள்ளார்.  டாப்சி பேட்மிண்டன் வீரரை காதலிப்பதாக கிசுகிசுக்களும் பரவி வருகின்றன இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்றும் இணைய தளங்களில் செய்திகள் பரவி உள்ளன. டாப்சி டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பைக் ஓட்டும் ஆசையை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-   ‘‘பைக், ஆண்கள் மட்டுமே ஓட்டக்கூடியது அல்ல. பெண்களுக்கும் பைக் ஓட்டும் திறமை இருக்கிறது. ஆண்களைப் போல் பெண்களும் திறமையாக பைக் ஓட்டுவார்கள். எனக்கு பைக் ஓட்ட ஆர்வம் இருக்கிறது. சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பைக் ஓட்ட தயாராக இருக்கிறேன். என் பெற்றோர்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் சம்மதம் கிடைத்தால், தாராளமாக பைக் ஓட்டுவேன்.’’

சிகரட் மீது வெறுப்பு ஏற்படுவதற்காகவே வரி அதிகரிப்பு!

Image
புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டை தடுப்பதில் இலங்கை பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மது, புகையில் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருள் பயன்பாடுகளில் இருந்து விடுபட்ட வாழ்கை ஒன்றை அனைத்து இலங்கையர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி, மஹவலி ரிஷ் ஹோட்டலில் இடம்பெற்ற மது, புகையில் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். சிகரட் பெட்டிகளின் 80 வீதமாமான பகுதிகளில் படங்கள் மூலமான எச்சரிக்கையை வௌியிடுவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடிந்ததற்கு பாராட்டுக்களை தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் சிகரட்டுக்கள் மீதான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும், அது சிகரட் பயன்பாடு மீது வெறுப்பு ஏற்படுவதற்கான நடவடிக்கை என்றும் ஜனாதிபதி கூறினார். 21 ம் நூற்றாண்டில் போதை ஒழிப்பு மற்றும் கொள்கை இலக்குகளை நோக்காகக் கொண்டு நடைபெறுக...

பண மோசடியில் ஈடுபட்டு வந்த மூவர் கைது!

Image
பண மோசடி செய்த சம்பவம் தொடர்பாக அனுராதபுரம், வஹால்கடை பிரதேசத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் ஒன்றில் எடுத்ததாக கூறி தொல்லியல் பொருட்ளை விற்று மோசடியாக பணத்தை பெற்றுக்கொண்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பித்தாளை விளக்கு, பித்தாளை லாம்பு, இரண்டு உலோக பெட்டிகள், கல்லினால் செய்த இரண்டு குப்பிகளை பொலிஸார் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொப்பிட்டிகொல்லாவ மற்றும் ஹொரவபொத்தனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் இணையத்தளம் ஒன்று இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது!

Image
வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகத்துறை மற்றும் நீதி அமைச்சுக்களின் முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் சிறிலால் தெரிவித்துள்ளார். வடக்கில் நீதித்துறையின் முடிவுகள் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிபதிகள், சட்டவாளர்கள் குறித்து அவதூறான செய்திகளை வெளியிடுவதாகவும், வடக்கில் பொதுமக்களைத் தூண்டி விடும் வகையில் செயற்படுவதாகவும், இந்த இணையத்தளம் மீது முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இணையத்தளம் சிறிலங்கா ரெலிகொம் இணைய வழி சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளது. முறைப்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு ஆகியன மேற்கொள்ளும் விசாரணைகள் முடியும் வரை இணையத்தளம். தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் புதிய நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தடை செய்யப்பட்ட முதல் ...

எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு

Image
வத்தளை, மாபோலயில் பிரபல தனியார் நிறுவனமொன்றில் எட்டு லட்சம் ரூபா பணத்துடன் நிறுவன வாகன சாரதி தலைமறைவாகியுள்ளதாக வத்தளை பொலிஸார் நேற்று தெரிவித்தனர். இது குறித்து தெரியவருவதாவது, வத்தளை மாபோல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் சாரதியாகப் பணிபுரிந்த நபர் ஒருவர் கடந்த விஜயாழக்கிழமை காலை நிறுவனத்தின் ஆறு லட்சம் ரூபா , இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரு காசோலைகள் உள்ளிட்ட நிறுவனத்தின் ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். இந்நிலையில் வத்தளை, மாபோல பிரதான வீதிக்கருகில் குறித்த வாகனத்தை நிறுத்தி விட்டுவிட்டு அவர் தலைமறைவாகியுள்ளார். அச்சமயம் குறித்த வாகனத்தில் ஏழு லட்சம் ரூபா பெறுமதியான சரக்குகள் இருந்ததாகவும் தெரியவருகிறது. குறித்த சாரதி தொடர்பான தகவல்கள் ஏதும் நிறுவனத்துக்கு தெரியவராத நிலையில் அவருக்கு எதிரான முறைப்பாடொன்றை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் வத்தளை பொலிஸ் நிலையத்தில் செய்துள்ளார். சாரதியாகப் பணிபுரிந்த குறித்த சந்தேக நபர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இரத்தினபுரி, பெல்மடுல்ல வீட்டின் அறையை பொலிஸார் சோதனையிட்ட போது அங்கு எதுவும் இருக்க...