இன்று கலைகளின் திருவிழா காரைதீவில் ஆரம்பம்!

சமூக நல்லுறவுக்கான கலை பண்பாட்டுத் திருவிழா, இன்று வியாழக்கிழமை அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கலந்துகொண்டார்.,
இந்நிகழ்வானது நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 03 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 
தேசிய ஒற்றுமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், ஐரோப்பிய ஒன்றியம், கெயார் நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் முதலாம் நாள் விழா காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாள் விழா விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் மூன்றாம் நாள் விழா சண்முகா வித்தியாலயத்திலும் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது
(இன்று முதல் 3 நாட்களுக்கு 3 பாடசாலைகளுக்கு விடுமுறை)

Popular posts from this blog

இலங்கை உட்பட 4 நாடுகளில் வேற்று கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு

எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு

கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி படுகாயம்!