பண மோசடியில் ஈடுபட்டு வந்த மூவர் கைது!
பண மோசடி செய்த சம்பவம் தொடர்பாக அனுராதபுரம், வஹால்கடை பிரதேசத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் ஒன்றில் எடுத்ததாக கூறி தொல்லியல் பொருட்ளை விற்று மோசடியாக பணத்தை பெற்றுக்கொண்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பித்தாளை விளக்கு, பித்தாளை லாம்பு, இரண்டு உலோக பெட்டிகள், கல்லினால் செய்த இரண்டு குப்பிகளை பொலிஸார் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொப்பிட்டிகொல்லாவ மற்றும் ஹொரவபொத்தனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

