கிழக்கில் பெருமளவில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்!
திருகோணமலை கடற்கரையில் பெருமளவு மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
பூச்சக்கன்னி எனப்படும் பெருமதியான இனத்தைச் சேர்ந்த மீன்களே இவ்வாறு கரையொதுங்கியுள்ளன.
சுமார் 20 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான மீன்கள் இதுவரை இறந்த நிலையில் கரையோதுங்கியுள்ளதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான காரணத்தை கடற் தொழில் திணைக்கள அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் நேற்று முன்தினமும் 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் கரைவலை மூலம் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
