Posts

Showing posts from October, 2016

பண மோசடியில் ஈடுபட்டு வந்த மூவர் கைது!

Image
பண மோசடி செய்த சம்பவம் தொடர்பாக அனுராதபுரம், வஹால்கடை பிரதேசத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் ஒன்றில் எடுத்ததாக கூறி தொல்லியல் பொருட்ளை விற்று மோசடியாக பணத்தை பெற்றுக்கொண்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பித்தாளை விளக்கு, பித்தாளை லாம்பு, இரண்டு உலோக பெட்டிகள், கல்லினால் செய்த இரண்டு குப்பிகளை பொலிஸார் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொப்பிட்டிகொல்லாவ மற்றும் ஹொரவபொத்தனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் இணையத்தளம் ஒன்று இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது!

Image
வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகத்துறை மற்றும் நீதி அமைச்சுக்களின் முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் சிறிலால் தெரிவித்துள்ளார். வடக்கில் நீதித்துறையின் முடிவுகள் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிபதிகள், சட்டவாளர்கள் குறித்து அவதூறான செய்திகளை வெளியிடுவதாகவும், வடக்கில் பொதுமக்களைத் தூண்டி விடும் வகையில் செயற்படுவதாகவும், இந்த இணையத்தளம் மீது முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இணையத்தளம் சிறிலங்கா ரெலிகொம் இணைய வழி சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளது. முறைப்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு ஆகியன மேற்கொள்ளும் விசாரணைகள் முடியும் வரை இணையத்தளம். தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் புதிய நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தடை செய்யப்பட்ட முதல் ...

எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு

Image
வத்தளை, மாபோலயில் பிரபல தனியார் நிறுவனமொன்றில் எட்டு லட்சம் ரூபா பணத்துடன் நிறுவன வாகன சாரதி தலைமறைவாகியுள்ளதாக வத்தளை பொலிஸார் நேற்று தெரிவித்தனர். இது குறித்து தெரியவருவதாவது, வத்தளை மாபோல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் சாரதியாகப் பணிபுரிந்த நபர் ஒருவர் கடந்த விஜயாழக்கிழமை காலை நிறுவனத்தின் ஆறு லட்சம் ரூபா , இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரு காசோலைகள் உள்ளிட்ட நிறுவனத்தின் ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். இந்நிலையில் வத்தளை, மாபோல பிரதான வீதிக்கருகில் குறித்த வாகனத்தை நிறுத்தி விட்டுவிட்டு அவர் தலைமறைவாகியுள்ளார். அச்சமயம் குறித்த வாகனத்தில் ஏழு லட்சம் ரூபா பெறுமதியான சரக்குகள் இருந்ததாகவும் தெரியவருகிறது. குறித்த சாரதி தொடர்பான தகவல்கள் ஏதும் நிறுவனத்துக்கு தெரியவராத நிலையில் அவருக்கு எதிரான முறைப்பாடொன்றை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் வத்தளை பொலிஸ் நிலையத்தில் செய்துள்ளார். சாரதியாகப் பணிபுரிந்த குறித்த சந்தேக நபர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இரத்தினபுரி, பெல்மடுல்ல வீட்டின் அறையை பொலிஸார் சோதனையிட்ட போது அங்கு எதுவும் இருக்க...

இலங்கை உட்பட 4 நாடுகளில் வேற்று கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு

Image
பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் பிரபஞ்சத்தில் உலாவும் நுண்ணுயிரியல் துகள்கள் தொடர்பில் ஆய்வு நடவடிக்கைகளில் ஆசிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. இலங்கை, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மேற்கத்திய சித்தாந்தமாக கருதப்படும் ஆசிய கண்டுபிடிப்புகளுக்கு தலை வணங்கும் நிலை மேற்கத்திய விஞ்ஞானிகள் விரைவில் ஏற்படும் என, நவீன வானவியல் உயிரியல் தந்தையாக கருதப்படும் பேராசிரியர் சந்ரா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு காரணமாக படைப்பாளர்களின் மத ரீதியான கருத்துகளுக்கு அடிமையாகியுள்ள மேற்கத்திய விஞ்ஞானிகள், பூமிக்கு அப்பால் உயிரினங்கள் உள்ளன என்பதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இன பாரபட்சத்தை காரணமாக கொண்டு மேற்கத்திய விஞ்ஞானிகள் ஆசிய கருத்திற்கு எதிராகும் போக்கினை கொண்டுள்ளனர். எனினும் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பௌத்தம் மற்றும் மதங்கள் மீது ஈர்ப்பு கொண்டு நாடுகள். எனவே அந்த நாடுகளின் விஞ்ஞானிகளிடம் உள்ள பரந்த சிந்தனையை சுதந்திர கருத்தின் ஊடாக பிரபஞ்சத்தை நோக்கி பார்ப்பதற்கான வ...

தீபாவளி நாளில் நடந்தேறிய இப்படியொரு விபரீதம்!

Image
இலங்கையில் பல பாகங்களில் வெகு விமர்சையாக தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் வேளையில் எதிர்பாராத சந்தர்பத்தில் வீடொன்றின் மீது பட்டாசு விழுந்து தீப்பற்றிய சம்பவம் முல்லைத்தீவு கைவேலி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் முல்லைத்தீவு –கைவேலிப்பகுதியில் இன்று காலை (29) அளவில் வீடொன்றின் மீது விழுந்த பட்டாசால் வீடொன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், வீட்டிலிருந்து எந்தவொரு பொருட்களையும் மீட்கமுடியாது அனைத்தும் தீக்கு இரையாகியுள்ளன. குறித்த வீட்டில் தாய் மற்றும் 2 பிள்ளைகள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை குறித்த பெண் கடந்த மூன்று மாதங்களாக தனது கணவர் பிரிந்து வாழ்வதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வாழும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர் எதிர்வரும் காலத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் தான் என்ன செய்யப்போகின்றேன் வசிக்க வீடில்ல...

கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி படுகாயம்!

Image
பழைய கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் கடமையில் ஈடுப்பட்டிருந்த  பொலிஸ் அதிகாரி ஒரவர் படுகாயம் அடைந்துள்ளார். பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடம் ஒன்று விழுத்மையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரயில் - வான் மோதி நால்வர் படுகாயம்

Image
புத்தளம் நாகவில்லுவ பிரதேசத்தில் ரயில் கடவையில் வைத்து ரயிலில், வான் மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்ற னர் .

சிறைக்கைதிகள் ஆறுபேர் தப்பியோட்டம்

Image
நீர்கொழும்பு திறந்தவெளி சிறைச்சாலையில்  இருந்து சிறைக்கைதிகள் ஆறுபேர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெரோய்ன் போதைபொருள் மற்றும் வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளே தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொரட்டுவை பல்கலைக்கழத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!!

Image
மொரட்டுவை பல்கலைக்கழத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிரியாவில் பாடசாலை மீது விமானத் தாக்குதல்: 22 சிறுவர்கள் உள்பட 35 பேர் பலி!!!

Image
சிரியாவில் பாடசாலை வளாகம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 35 பேர் பலியாகினர்.  இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்றால், இது போர்க்குற்றம்தான் என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது.  சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு, மார்ச் மாதம் 15-ந் திகதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. அவ்வப்போது சிறிய அளவில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டபோதும், தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த உள்நாட்டுப்போர் நீடிக்கிறது.  3 லட்சத்துக்கும் அதிகமானோர் இதில் கொல்லப்பட்டு விட்டனர். பல லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.  ஆனாலும் சண்டை முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த நிலையில் அங்குள்ள இத்லிப் மாகாணத்தில் ஹாஸ் என்ற கிராமத்தில் உள்ள பாடசாலை வளாகம் மற்றும், சுற்றுப்புறங்கள் மீது நேற்று முன்தினம் போர் விமானங்கள் 6 முறை வான்தாக்குதல்களை நடத்தின. இதனால் பள்ளி கட்டிடங்கள் பெருத்த சேதத்துக்குள்ளாயின.  பெரிய அளவில் கரும்புகை மண்டலம் உருவானது. குழந்தைகளும், ஆசிரி...

லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது; 90 பேரைக் காணவில்லை???

Image
  லிபியாவின் மேற்குப் பகுதிக் கரையோரப் பகுதியில், அகதிகள் படகொன்று மூழ்கியதில், 90க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என, கடற்கரையோரப் பாதுகாப்புப் பிரிவுப் பேச்சாளரொருவர் தெரிவித்தார். லிபியத் தலைநகர் திரிபோலிக்கு 41 கிலோமீற்றர்கள் கிழக்காக உள்ள இந்தக் கரையோரப் பகுதியில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. இதில், 29 பேரைக் காப்பாற்ற முடிந்ததாக, கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர். குறித்த அந்தப் படகு, இறப்பர் படகு எனத் தெரிவித்த அதிலிருந்து தப்பியோர், அதன் ஒரு பகுதியில் ஓட்டை ஏற்பட்டதன் காரணமாகவே, படகு மூழ்கியதாகத் தெரிவித்தனர். அந்தப் படகில், 126 பேர் பயணித்துக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர், "படகின் ஒரு பகுதியில் அதிகமானோர் காணப்பட்டதன் காரணமாக, அப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டு, நீர் உள்ளே புகுந்துள்ளது. சட்டவிரோதக் குடியேற்றவாசிகளில் 97 பேர், இன்னமும் கண்டுபிடிக்கப்படாதவர்களாவோ அல்லது மூழ்கியவர்களாகவோ காணப்படுகின்றனர்" என்றார். மத்தியதரைக் கடலைக் கடந்து, ஐரோப்பாவுக்குள் புக விர...

'வற்'னால் ரூ. 100 பில்லியன் வருமானம்...

Image
  எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் பெறுமதி சேர் (வற்) வரி அதிகரிப்பு காரணமாக, அரசாங்கத்துக்கு 100 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அரச நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.செனவிரத்ன, தெரிவித்தார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குளவி தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் பலி!!!

Image
ஹப்புத்தளை தொடலாகல பிரதேசத்தில் மரமொன்றில் ஏறிய இளைஞன் ( வயது 22) குளவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குளவி தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் 3 பேர், குளவி தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நிலநடுக்கங்களால் அதிர்ந்தது இத்தாலி!!!

Image
இத்தாலியின் மத்திய பகுதியில், நேற்றுப் புதன்கிழமை ஏற்பட்ட பாரிய அளவிலான இரண்டு நிலநடுக்கங்களால், சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டதோடு, கட்டடங்கள் பல இடிந்து வீழ்ந்துள்ளன. இத்தாலி நேரப்படி புதன்கிழமை இரவு 7:10 மணியளவில் (இலங்கை நேரப்படி இரவு 10:40 மணி) 5.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, 2 மணித்தியாலங்கள் கழித்து, 6.1 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலாவது நடுக்கம், தெற்குப் பகுதிகளிலும் கூட உணரப்பட, இரண்டாவது நடுக்கம், இன்னும் பெரியதாக, தலைநகர் றோமிலும் கூட ஏற்பட்டது. ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி, இத்தாலியின் அமட்ரீஸ் நகரத்தில் ஏற்பட்ட 6.0-6.2 றிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், 297 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டு, பலர் காயமடைந்திருந்தனர். அந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அண்மையாகவே, புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களும் அமைந்தன. இந்த நிலநடுக்கத்தின் விளைவாகச் சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், உறுதியான, தெளிவான தகவல்கள் எவையும், உத்தியோகபூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இருளுக்கும் மழைக்கும் மத்தியில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மீட்புப் ...

25 வர்த்தக நிலையங்களில் சோதனை

Image
அம்பாறை, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனைப் பிரதேசங்களிலுள்ள 25 வர்த்தக நிலையங்களில் நேற்றுப் புதன்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது, நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவுப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும்  அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எ.எல்.அலாவுதீன் தெரிவித்தார். அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனையை மேற்கொண்டனர். நுகர்வுக்குப் பொருத்தமில்லாமல் விற்பனைக்காக உணவுப் பொருட்களை வைத்திருந்த  வர்த்தக உரிமையாளர்களை எச்சரித்துள்ளதுடன், கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களை அழித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்று கலைகளின் திருவிழா காரைதீவில் ஆரம்பம்!

Image
சமூக நல்லுறவுக்கான கலை பண்பாட்டுத் திருவிழா, இன்று வியாழக்கிழமை அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கலந்துகொண்டார்., இந்நிகழ்வானது நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 03 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.  தேசிய ஒற்றுமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், ஐரோப்பிய ஒன்றியம், கெயார் நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இவ்விழாவின் முதலாம் நாள் விழா காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாள் விழா விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் மூன்றாம் நாள் விழா சண்முகா வித்தியாலயத்திலும் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது (இன்று முதல் 3 நாட்களுக்கு 3 பாடசாலைகளுக்கு விடுமுறை)

அனலின் அறிக்கை- அரங்கேறும் நாடகமோ?

Image
அனலின் அறிக்கை- அரங்கேறும் நாடகமோ? நிந்தவூரில் உள்ள அநியாயமான ...... அனல் மின்நிலையம் 2013ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தாலும், 2007 இல் இருந்தே அடித்தளம் இட்டிருக்கின்றது.  6 ஆண்டுகள் அனல் மக்களை / சூழலை நிர்மூலமாக்க - உருப்பெற எடுத்துக்கொண்ட காலங்களில் ... 1. அனலுக்கு அனுமதி ஓடி   ஆடி எடுக்கப்பட்டிருப்பது தெளிவு.அனுமதி எடுத்துக்கொண்ட வழிகளை தேடினால் ஊரில் இருக்கின்ற  *பிரதேசே அபிவிருத்திக்குழு முதல் சுற்றாடல் அதிகார சபை வரை பதில் கூற வேண்டும். குறிப்பாக அன்றிருந்த ஊரின் நிர்வாக கட்டமைப்பில் பிரதி சுகாதார அமைச்சருக்கு மிகப்பெரிய பங்குண்டு . அமைச்சரும் பதில் கூறவேண்டும் இன்றேல் அனலை இழுத்து மூட வைக்கவேண்டும்.  Faizal Cassim ,  Mohamed Thambi, Hasen Ali முடியவில்லை, அனல் உறவும் அனலால் வெந்த பணமும் வேண்டுமென்றால் மக்களை மறக்கட்டும், ஊருக்கும் துரோகம் செய்யட்டும். இல்லை மக்கள் வேண்டும் என்றால் அனலுக்கு எதிராக செயலில் காட்டட்டும். அவதானியுங்கள்! ஊர் மக்களே ! 2.அனல் பிரதி அமைச்சரின் அறிக்கையுடன் மட்டும் முடிவுறும் காரியமில்லை.'அந்தா வருது இன்னா வருது'...

யாழ் மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு

Image
17 வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு: அதிர்ச்சியில் யாழ் யாழ்ப்பாணத்து பள்ளி மாணவி ஒருவருக்கு 76 பேருடன் பாலியல்ரீதியாத தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 17 வயதாகும் இம் மாணவிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச் சிப்பாய் யார் யாருடன் உடலுறவை வைத்திருந்தார் என மருத்துவர்கள் கண்டறிய முற்பட்டவேளை இச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அறியப்படுகிறது. இச் சிப்பாய் குறித்த 17 வயது மாணவியோடு உறவுவைத்திருந்ததை ஒத்துக்கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ் மருத்துவர்களுக்கு இப் பெண் தொடர்பாக அவசர செய்திகள் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நடாத்தப்பட்ட விசாரணையின்போது, தன்னுடன் 76 ஆண்கள் தொடர்புகளை வைத்திருந்ததாக அவர் முதல் கட்டமாகத் தெரிவித்துள்ளார். 14 வயதில் இருந்தே தன்னுடன் ஆண்கள் உடலுறவுரீதியான தொடர்புகளை பேணிவந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த 76 பேர் தொடர்பாக வைத்திய பரிசோதனைக...
Image
No more power cuts from today - Ministry The Ministry of Power and Energy says that there will be no power cuts from today as the second generator at the Norochcholai Coal Power Plant has been restored.  Scheduled power cuts were announced by the ministry following the breakdown at the Norochcholai power plant on Saturday (15). Initially it was announced that power cuts lasting two and a half hours during the day and one hour during the night would be imposed, however that was later cut down to 1 hour in the morning and half hour in the evening.
Image

3 ways to make money on the Internet

இணையத்தில் பணம் சம்பாதிக்கும் 3 வழிகள்  ( 3 ways to make money on the Internet) இணையம் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு ஊடகமாக இருக்கின்றது ஆனல் அதற்கு கடின உழைப்பும் பொறுமையும் தேவை. அதிகம் பேர் இணையத்தில் விரைவாக பணம் சம்பாதிக்க நினைத்து முட்டாளாகிய சந்தர்ப்பங்கள்தான் அதிகம். இலகுவாக யாரும்  பணம் சம்பாதிக்க முடியாது அதே நேரம் கடின உழைப்பு கைகொடுக்காமல் இருக்கவுமாட்டது.  1.Blogging:  பணம் சம்பாதிக்க மிகவும் இலகுவான வழிகளில் முதன்மையானது Blogging. உங்களால் இலவசமாக blog ஐ blogger.com இல் உருவாக்க முடியும். அந்த blog ஐ அழகான முறையில் வடிவமைப்பு செய்யவேண்டும் அதேநேரம் SEO யினை சிறந்த முறையில் செய்யவேண்டும் மேலும் உங்கள் blog ஐ சிறந்த முறையில் சந்தைப்படுத்தி அதிகமான பவனையாளர்களை கவர வேண்டும். அதன் பிறகு Google adsense, affiliate marketing மற்றும் ஏனைய ads திட்டங்களான chitika, inforlinks, buysell ads ,etc போன்றவைகளின் மூலம் பணம் பார்க்க முடியும். 2. Freelance Writing:   இணையத்தில் பணம் பார்கும் வழிமுறையளில் அடுத்த முக்கிய முறைதான் Freelance Writing. யாரெல்லாம் ப...
Image
Murshidabad: Village sabha ‘punishes’  woman  for affair, forces husband to shave  her head Police sources said that the men also threatened the woman and her family with forcible eviction  and  a boycott if they filed a complaint over the incident. The incident took place in West Bengal’s Murshidabad district. A VILLAGE “sabha” of about 50 men in West Bengal’s Murshidabad forced a farmer to shave the head of his wife, who was accused of having an illicit relationship with another man, after the woman and her family failed to pay a “penalty” of Rs 6,000. Police sources said that members of the “salisha sabha”— the local version of a khap panchayat — allegedly dragged Mariam Bibi, 30, outside her house and made the village watch the “punishment” on Tuesday night at Chandpur in Naoda. The incident has led to rising tension in the village, said sources. “We have made four arrests in the case. Apart from the three who were named in the compl...